
முறைகேட்டில் ஈடுபட்ட தொண்டாமுத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர்... கண்டனம் தெரிவித்து வார்டு கவுன்சிலர் போராட்டம்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் ரமேஷ் குமார் பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டித்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் செயல் அலுவலர் ரமேஷ் குமார் பல்வேறு நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதை கண்டித்து தொண்டாமுத்தூர் பேரூராட்சி 9வது வார்டு கவுன்சிலர் வைரம் பா.செந்தில் குமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே இவர் இரண்டு முறை வரவு செலவு கணக்குகளில் முறைகேடு நடப்பதாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் வரவு செலவு கணக்குகளில் செயல் அலுவலர் ரமேஷ் குமார் முறைகேடுகளில் ஈடுபடுவதாக கூறியும் அதனை கண்டித்தும் தற்போது வைரம் பா.செந்தில் குமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
Add Asianetnews Tamil as a Preferred Source
