
Vizhinjam Seaport
சர்வதேச கப்பல் பாதையில் இருந்து விழிஞ்சம் துறைமுகம் 10 கடல் மைல்கள் தொலையில் தான் இருக்கிறது. மேலும் இயற்கையாகவே 20 மீட்டர் ஆழம் கொண்ட கடல் பகுதியாகும். இதனால் பல்வேறு நாடுகளுக்கான பயண தூரம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து பெரிதளவில் குறைவாகவே இருக்கும்.விழிஞ்சம் துறைமுகத்தில் முதற்கட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் ஆண்டுக்கு 10லட்சம் கொள்கலன்கள் கொள்ளளவு கொண்டதாக இருக்கிறது. மூன்று கட்ட பணிகளும் முடிவடையும் பட்சத்தில் 45லட்சம் கொள்கலன்களாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்தார் .அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர். இந்நிலையில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி,