Asianet News TamilAsianet News Tamil

Watch : சாலை தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி… விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் வீடியோ!!

ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி ஒன்று அங்கிருந்த சாலை தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி ஒன்று  அங்கிருந்த சாலை தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுக்குறித்த வீடியோ காண்பவரை பதைபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவே உள்ள தடுப்புகள் மீது ஏறி வேகமாக சாலையின் சென்று கொண்டிருந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளாவதை காணலாம்.

இதையும் படிங்க: ஆஸ்கர் விருது வென்ற 'The Elephant Whisperers' : யானை பராமரிப்பாளர்களான தம்பதியினரை பாராட்டிய விமான பயணிகள்!

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநருக்கு காலில் முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான சம்பவம் அனைவரையுன் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: கல்லூரி ஆண்டுவிழாவிற்கு வந்த நடிகை 'மிர்னாளினி ரவி'- மாணவிகளுடன் ஆடல் பாடல் கொண்டாட்டம்!

Video Top Stories