
மலேசியாவில் தைப்பூசத் திருவிழா ! சீனர்கள், தேங்காய் உடைத்து, வெறுங்காலுடன் நேர்த்திகடன் செய்தனர்!
மலேசிய பினாங்கு மாநிலத்தில் தைப்பூசத்தின் ஒரு தனித்துவமான அம்சம் சீன சமூகத்தின் குறிப்பிடத்தக்க ஈடுபாடு ஆகும். சீன இனத்தவர்கள் காவடி எடுத்து செல்வது மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைப்பது, வரும் தேருக்கு வழிவிடுவது... கோவில் அன்னதான நிகழ்வுகளில் பங்கேற்பது என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கின்றனர். வண்ணமயமான புடவைகளிலும், நேர்த்தியான வேஷ்டிகளிலும் சீனர்கள், ஆடம்பரமாக தேங்காய் உடைத்து, வெறுங்காலுடன் நேர்த்திகடன் செய்தனர்