மகா கும்பமேளாவில் புனித நீராடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி! பிரம்மாண்டமான சனாதன தர்ம விழா என உருக்கம்!

Share this Video

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் சென்று புனித நீராடியுள்ளார். கோடிக்கணக்கான இந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய நீராடியதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ரவி, "பாரதம் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வந்த எண்ணற்ற கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, பிரயாக்ராஜின் புண்ணிய தீர்த்தமான திவ்ய, பவ்ய மகாகும்பத்தில் புனித நீராடி, தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் நல்வாழ்வுக்காகவும், நமது மாபெரும் தேசமான பாரதத்தின் இணக்கமான வளத்துக்காகவும் வேண்டி வழிபட்டேன் என்று கூறியுள்ளார் .

Related Video