
உச்சநீதிமன்ற தீர்ப்பு.. ஆளுநருக்கு மட்டுமல்ல.. ஆட்டுவிக்கும் மோடிக்கும்தான் எச்சரிக்கை- சித்தராமையா!
தமிழ்நாடு அரசின் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு என்பது ஆளுநர்களுக்கு எதிரானது மட்டுமல்ல.. ஆளுநர்களை திரைமறைவில் ஆட்டுவிக்கும் பிரதமர் மோடிக்கும் அவரது தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கும்தான் எச்சரிக்கை என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.