Asianet News TamilAsianet News Tamil

ஆட்டோ ஓட்டிய எஸ்.பி.வேலுமணி… சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்!!

கோவையில் அதிமுக தொண்டரின் வேண்டுகோளை ஏற்ற எஸ்.பி.வேலுமணி, ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவையில் அதிமுக தொண்டரின் வேண்டுகோளை ஏற்ற எஸ்.பி.வேலுமணி, ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கோவை சுண்டகா முத்தூர் பகுதி சேர்ந்தவர் நிரோஜ் குமார். அதிமுக தொண்டரான இவர், தான் புதிதாக வாங்கிய ஆட்டோவை எடுத்துக்கொண்டு கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் ஆசி பெறச் சென்றுள்ளார்.

அப்போது தனது புதிய ஆட்டோவை ஓட்டி தனக்கு ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டார். தொண்டரின் கோரிக்கையை ஏற்ற எஸ்.பி.வேலுமணி, ஆட்டோவை சிறிது தூரம் ஓட்டிக்காட்டி தொண்டரின் ஆசையை நிறைவேற்றினார்.

எஸ்பி.வேலுமணி ஆட்டோ ஓட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Video Top Stories