வெளியானது ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்பட டிரெய்லர்... அனல் பறக்கும் வசனங்களுடன் ஆக்ஷன் காட்சிகள்!!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தின் டிரெய்லரை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தின் டிரெய்லரை அந்த படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ளார். விறுவிறுப்பான ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். வில்லனாக நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இதில், நாசர், பூர்ணிமா, இளவரசு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இயக்குனர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்திகு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அனல் பறக்கும் வசனங்களுடன் ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.