
PM Modi podcast with LexFridman
PM Modi's podcast with Lex Fridman : பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் மற்றும் தத்துவம் குறித்த ஆழமான விவாதங்களுக்கு பெயர் பெற்ற அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக உரையாடியுள்ளார். இந்த பாட்காஸ்ட் பற்றி எக்ஸ் பக்கத்தில் அறிவித்த லெக்ஸ் ஃப்ரிட்மேன், "என் வாழ்க்கையின் மிகவும் சக்திவாய்ந்த உரையாடல்களில் ஒன்றாக இருக்கும்" என்று கூறியிருந்தார். இதே போன்று தான் பிரதமர் நரேந்திர மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து பகிர்ந்திருந்தார். அதில் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனா உரையாடல் உண்மையிலேயே கவர்ச்சிகரமானதாக இருந்தது. எனது குழந்தைப் பருவம், இமயமலையில் கழித்த ஆண்டுகள் மற்றும் பொது வாழ்வில் நான் மேற்கொண்ட பயணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசியிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் அவர் பேசிய வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி பல்வேறு தலைப்புகளில் பேசியிருக்கிறார்.