பஞ்சாபில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் ! வீடுகள் சேதம் !

Share this Video

வெள்ளிக்கிழமை (மே 9) இரவு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், இந்திய வான்வெளிக்குள் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களை அனுப்பியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. இதற்கு இந்திய பாதுகாப்புப் படையினர் உடனடி மற்றும் உறுதியான பதிலடியைக் கொடுத்தனர். கடுமையான மோதலில், பஞ்சாபின் ஃபிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் ட்ரோன்களில் ஒன்று வெடிபொருளை வீசியது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காயமடைந்தனர். மற்றும் வீட்டில் வளர்க்கும் மாடுகள் காயமடைந்தது .இந்த வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Related Video