
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: பிரதிஷ்டை, பூஜை நேரம் என்ன? முழு விவரம் இதோ !!
அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ராமர் கோவில் பிரதிஷ்டை, பூஜை நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அயோத்தி ராமர் கோயில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், இன்று முதல் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டைக்கான முறையான பூஜை சடங்குகள் தொடங்கியுள்ளது. முதலில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி பரிகார பூஜையுடன் முறைப்படி தொடங்கப்படும். வழிபாட்டு முறை காலை 9:30 மணிக்குத் தொடங்கி 5 மணி நேரம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
பண்டிட் கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் மற்றும் பண்டிட் விஸ்வேஷ்வர் சாஸ்திரிகளின் கூற்றுப்படி, 2024ம் ஆண்டு ஜனவரி 22 அன்று மதியம் 12:29 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகள் முதல் 12:30 நிமிடங்கள் மற்றும் 32 வினாடிகள் வரை 84 நொடிகள் சிலை பிரதிஷ்டை நடைபெறும். ஜோதிடத்தின்படி, இந்த முஹூர்த்தத்தின் ஆன்மா மேஷ லக்னத்தின் குரு. அதனால் ராமரின் ராஜ்ஜியம் பெருகும்.
வியாழனின் பார்வை 5, 7 மற்றும் 9 ஆம் வீட்டில் விழுகிறது. இதுவும் மங்களகரமானது. பகவான் ராமரும் அபிஜீத் முஹூர்த்தத்தில் பிறந்தார் தான். லக்னேஷ் குருவின் பார்வை படும் வீடுகள். அதன் செல்வாக்கு உலகம் முழுவதும் இந்தியாவின் நிலையை பலப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.