
நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்-அமைச்சர் ஆவோம் என பேசுகின்றனர்- முதல்வர் ஸ்டாலின்!
ன்றைக்கு சிலர் கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் நிலை நாட்டில் இருந்துக்கொண்டிருக்கிறது. நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதல்-அமைச்சர் என சிலர் சுற்றிக்கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் யார், எப்படிப்பட்டவர், எந்தக் கட்சித் தலைவர் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தையும் கவுரவத்தையும் குறைக்க நான் விரும்பவில்லை என மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்