
இந்திய ரயில்வேயின் மற்றொரு மைல்கல் ! கட்டி முடிக்கப்பட்ட மிசோரம் - சாய்ராங் ரயில்வே மேம்பாலம்!
மிசோரம் மாநிலத்தில் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ. தொலைவில் சாய்ராங் அருகே குறுங் ஆற்றின் மீது புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் மாநிலத் தலைநகரங்களை ரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் பாலம் கட்டப்படுகிறது.தற்போது பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட தயாராக உள்ளது. அது குறித்த விடியோவை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.