Asianet News TamilAsianet News Tamil

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் என்ன..? மிட்செல் ஸ்டார்க் என்ன சொல்றாருனு இந்த வீடியோவில் பாருங்க

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிரான திட்டம் என்ன..? மிட்செல் ஸ்டார்க் என்ன சொல்றாருனு இந்த வீடியோவில் பாருங்க

உலக கோப்பை தொடரில் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானையும் அடுத்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலிய அணி, அடுத்த போட்டியில் வலுவான இந்திய அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். 

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க், செம ஃபார்முக்கு திரும்பியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டார்க்கிடம் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்தும் விராட் கோலி குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த ஸ்டார்க், இந்திய அணி வலுவான அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. பேட்டிங் டெப்த் நன்றாக உள்ளதோடு இந்திய அணியின் பவுலிங்கும் சிறப்பாக உள்ளது. இந்திய அணியில் முக்கியமான வீரர் விராட் கோலி. ரோஹித் சர்மாவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதமடித்துள்ளார். இந்திய அணியில் பேட்டிங் டெப்த் நன்றாக உள்ளது. எனினும் ஒரு பவுலிங் யூனிட்டாக நாங்கள் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை வீழ்த்துவதற்கு குறித்து விவாதிக்க உள்ளோம் என்றார். 
 

Video Top Stories