
கேரளா
கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்த மருத்துவ கல்லூரியில் நேற்று (வெள்ளி கிழமை) இரவு 8 மணியளவில் யு.பி.எஸ். அறையில் மின்கசிவு சம்பவம் ஏற்பட்டு உள்ளது.இதன் தொடர்ச்சியாக புகைமூட்டம் ஏற்பட்டு உள்ளது.இதனால், மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் மூச்சு திணறி பலியாகி உள்ளனர். இதுபற்றி எம்.எல்.ஏ. சித்திக் கூறும்போது, வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா (வயது 44) என்பவர் உயிரிழந்து உள்ளார் என உறுதிப்படுத்தினார்.