
லண்டனில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைத் தாக்க முயன்ற காலிஸ்தான் தீவிரவாதிகள்!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக லண்டன் சென்றுள்ளார்.அப்போது அவரின் மீது காலிஸ்தானி தீவிரவாதிகள் குழு தாக்குதல் நடத்த முயற்சித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.ஜெய்சங்கர் சாத்தம் ஹவுஸ் இடத்திலிருந்து வெளியேறும்போது, அந்த கூட்டத்திலிருந்து ஒரு நபர் அவரது காரை நோக்கி ஓடி வந்து போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் இந்திய தேசியக் கொடியைக் கிழித்தார். இந்த சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகிறது.