
காஷ்மீரில் தீவிரவாதியின் வீடு இடித்து தரை மட்டம் - தாய் கண்ணீர் பேட்டி
ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், அதில் தொடர்புடைய லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அடில்உசேன் தோகர், அலி பாய் மற்றும் ஹாஷிம் மூசா ஆகியோரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்காக ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என அனந்த்நாக் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், மூவரும் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படுகிறது.புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் ஆசிப் ஷேக்கின் வீடு மற்றும் அனந்த்நாக் பிஜ்பேராவில் அடில் தோக்கரின் வீடுகள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவோரை எச்சரிக்கும் வகையிலும், பயங்கரவாத ஆதரவை நிர்மூலமாக்கும் நடவடிக்கையிலும் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் ஓவியங்களை சாட்சியங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.