
Indian 2 Movie Review: இந்தியன் 2 படம் எப்படி இருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதோ!
லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படம் உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படம் பற்றி ரசிகர்களின் விமர்சனத்தை இங்கு காணலாம்.
நடிகர் கமலஹாசன் உடன், எஸ்ஜே சூர்யா, சித்தாத், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா என பல நட்சத்திர பட்டாளமே இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இந்தியன் 2 படப்பிடிப்பானது விபத்து, கொரோனா, நடிகர் கமலின் அரசியல் வருகை என தள்ளித்தள்ளி ஒருவழியாக இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தியன் 2 படம் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தின் ரசிகர்களின் விமர்சனம் வெளியாகி உள்ளது.