
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மக்கள் போராட்டம் !
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் நேற்று நண்பகல் சுற்றுலாப் பயணிகள் குழு மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பொதுமக்களை குறிவைத்து ஜம்மு காஷ்மீரில் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக கருதப்படும் இந்த சம்பவத்தில் குறைந்தது இருபத்தி ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினர் அடங்குவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் பஹல்காம்..தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது . அநேக பேர் தங்கள் குடும்பங்களை இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஜம்மு-காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .