பஞ்சாப் எல்லைபகுதியில் பாகிஸ்தான் இரவுமுழுவதும் தாக்குதல்!பதிலடி கொடுத்த இந்தியா-நேரடி காட்சிகள்

Share this Video

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எசியாநெட் நியூஸ் தமிழ் நேரடியாக பதிவுசெய்த வீடியோ காட்சிகள்.

Related Video