15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சி! ஏவுகணைகளை வழிமறித்து அழித்தது சுதர்சன சக்கரம்!

Share this Video

ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 ஏவுகணைக்கு இந்தியா ‘சுதர்சன சக்கரம்’ என பெயரிட்டுள்ளது. எதிரி நாட்டு ஏவுகணை 600 கி.மீ. தூரத்தில் வரும்போதே, இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை கண்காணிக்க தொடங்கிவிடும். 400 கி.மீ. தூரத்துக்குள் நெருங்கி வரும்போது, நடுவானில் அதை இடைமறித்து அழித்துவிடும்.இந்திய வான் பாதுகாப்பு ஏவுகணை தாக்கி அழித்ததில், தரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணை பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை சீன தயாரிப்புகளா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்திய படைகள் நேற்று தக்க பதிலடி கொடுத்தன. லாகூர் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்களை குறிவைத்து இந்தியப் படைகள் நேற்று ‘ஹார்ப்பி’ என்ற தற்கொலை படை ட்ரோன்களை வீசின.இவற்றின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில், லாகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் பாக். வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்திரி கூறினார்.

Related Video