ஓங்கு புகழோடு வாழ வேண்டும்... முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து!!

நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Share this Video

நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவருக்கு அரசியல் தலைவர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் - பழனி சாலை வனப்பகுதியில் காட்டுத்தீ! - வனத்துறையினர் போரட்டம்!

அவர்களை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் இளையராஜா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 70 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு நிறை செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் மு.க.ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் பாஜகவுக்கு எதிராக விசிக ஆர்ப்பாட்டம்... திருமாவளவன் பங்கேற்று கண்டன முழக்கம்!!

அதன்படி, நாளை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் அமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Video