பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு பொற்கோவிலுக்கு அச்சமின்றி வந்த திரளான மக்கள்!

Share this Video

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து 3வது நாளாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் மீது பாகிஸ்தான் திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் இந்திய பாதுகாப்புப்படையால் முறியடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொற்கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மக்கள் எவ்வித அச்சம் இன்றி பொற்கோவிலுக்கு சென்று வந்தனர்

Related Video