Ed Sheeran

Share this Video

'ஷேப் ஆப் யூ', 'பெர்பெக்ட்' உள்ளிட்ட பாடல்கள் மூலம் புகழ்பெற்ற இசைக் கலைஞர் எட் ஷீரன். இவர் சமீபத்தில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரபரப்பான தேவாலய தெருவில், எட் ஷீரன் மைக், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து பாடல் பாடத் தொடங்கினார் .அப்போது அங்கு வந்த போலீசார் எட் ஷீரனிடம் பாடலை நிறுத்துமாறு கூறினர். இருப்பினும் அவர் தொடர்ந்து பாடியதால், ஒரு போலீஸ்காரர் மைக் வயரை பிடுங்கினார்.

Related Video