
DMK Youth Wing Conference : வேற லெவல் போங்க! பிரமாண்ட டிரோன் நிகழ்ச்சியில் வானில் ஜொலித்த தலைவர்களின் படங்கள்!
திமுக இளைஞரணி மாநாட்டு திடலில் டிரோன் காட்சியால் வானில் ஜொலிக்கும் திராவிட இயக்கத் தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன.
சேலத்தில் திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 1500 டிரோன்கள் வைத்து வானத்தில் டிரோன் காட்சி அரங்கேற்றப்பட்டது. அதில் திமுக தலைவர்களான தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி படங்கள் இடம் பெற்றிருந்தன. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கையெழுத்துடன் பேனா, எய்ம்ஸ் செங்கல் தூக்கிய உதயநிதி ஸ்டாலின் படமும் இடம் பெற்றிருந்தது.