OTTக்கு செல்லும் லால் சலாம்.. புனித யாத்திரையாக திருத்தணி சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - லேட்டஸ்ட் வீடியோ!

Aishwarya Rajinikanth : பிரபல இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்  செய்துள்ளார்.

First Published Feb 22, 2024, 8:50 PM IST | Last Updated Feb 22, 2024, 8:50 PM IST

அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி, ஐந்தாம் வீடாக போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி என அழைக்கப்படும் முருகன் கோயிலில் மாசி பிரம்மோற்சவம் விழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இயக்குனர், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தந்து மூலவருக்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற அபிஷேகத்தில் அவர் கலந்து கொண்டார். பின் அவருக்கு அச்சகர்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கினர்.

Video Top Stories