
ஒடிசா கட்டாக்கில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான காமாக்யா அதிவிரைவு ரயில்! மறுசீரமைப்பு பணிகள் தீவிரம்
ஒடிஷா மாநிலத்தின் சௌத்வார் பகுதியில் இன்று (மார்ச் 30) காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுவிழுந்து விபத்துக்குள்ளானது. மாங்குளி என்ற பயணிகள் நிறுத்தம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பங்களூருவில் இருந்து காமாக்யா நோக்கி சென்று கொண்டிருந்த பெங்களூரு-காமாக்யா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இந்நிலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளான காமாக்யா அதிவிரைவு ரயிலின் மறுசீரமைப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது !