
இந்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து...சேதமடைந்த பயங்கரவாத பகுதிகளின் காட்சிகள் !
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி இருக்கிறது . பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் 90 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹாவல்பூர் நகரத்தில் பயங்கரவாதப் பகுதிகள் சேதமடைந்து கட்டிடங்கள் இடிந்து விழுந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .