இதுவே என் கடைசி வீடியோ.. என் மரணம் சீமான் யார் என்பதை உங்களுக்கு சொல்லும் - பகீர் கிளப்பும் நடிகை விஜயலக்ஷ்மி!

Actress Vijayalakshmi : இதுவே தான் வெளியிடும் கடைசி வீடியோ என்றும், தன் மரணம் சீமான் யார் என்பதை மக்களுக்கு சொல்லும் என்று கூறி பகீர் கிளப்பியுள்ளார் நடிகை விஜயலக்ஷ்மி.

First Published Mar 5, 2024, 7:26 PM IST | Last Updated Mar 5, 2024, 7:44 PM IST

கன்னட மொழியில் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜயலட்சுமி. இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருது கூட வழங்கப்பட்டுள்ளது. கன்னட மொழியில் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த விஜயலட்சுமி, தமிழ் மொழியிலும் பாஸ் என்ற பாஸ்கரன், பிரண்ட்ஸ், கலகலப்பு, மிலிட்டரி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கடந்த 2011ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக அப்போது அவர் புகார் கொடுத்தது அனைவரும் அறிந்ததே. அந்த நாள் தொட்டு சீமான் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை விஜயலட்சுமி முன்வைத்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி கர்நாடகாவில் வீட்டின் மாடியில் நின்று அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று மீண்டும் வைரலானது. சீமானை தன்னிடம் பேச வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று மார்ச் 5ஆம் தேதி ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த 2008ம் ஆண்டு தான், தன் அக்காவின் விஷயமாக சீமானை சந்தித்ததாகவும். அப்பொழுது அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்து தற்பொழுது தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சீமான் மீது அவர் குற்றம் சாட்டியிருக்கிறார். பலமுறை தான் வீடியோ வெளியிட்டும் அதை கண்டுகொள்ளாத நிலையில் தன்னை தமிழகத்திற்குள் நுழைய விடாத அளவிற்கு தனக்கு விபச்சாரி என்கின்ற பட்டத்தை சீமான் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். 

மேலும் இதுதான் தமிழகத்திற்கு நான் வெளியிடும் கடைசி வீடியோ என்றும், இன்னும் இரண்டு நாட்களில் தான் எப்படி இறந்தேன் என்பதை கர்நாடக அரசாங்கம் செய்தியாக வெளியிடும் என்றும் கூறி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை விஜயலட்சுமி.

Video Top Stories