திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா

பிரபல திரைப்பட நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா ஆகியோர் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Share this Video

திருவண்ணாமலையில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபல திரைப்பட நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா ஆகியோர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு புதியதாக கான்ஸ்டபிள் நந்தன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ள நிலையில் படத்தின் பூஜைக்காக அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பட பூஜை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்மந்த விநாயகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தனர், அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் யோகிபாபு மற்றும் ரவிமரியா ஆகியோருக்கு மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது. யோகிபாபுவிடம் அங்கிருந்த பொதுமக்கள் பலரும் செல்பி எடுத்தனர்.

Related Video