Asianet News TamilAsianet News Tamil

நேரடி நாமினேஷனில் இருந்து தப்பித்த ஜிபி முத்து... வசமாக சிக்கியதால் கதறி அழுத தனலட்சுமி - பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஜிபி முத்து உடன் சண்டையிட்ட தனலட்சுமி இன்று நாமினேட் ஆனதால் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

First Published Oct 14, 2022, 10:02 AM IST | Last Updated Oct 14, 2022, 10:02 AM IST

பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஆரம்பமாகி இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், போட்டியாளர்களிடையே தற்போதே சண்டை ஆரம்பமாகி உள்ளது. நேற்று ஜிபி முத்து உடன் தனலட்சுமி சண்டையிட்டது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருள் ஆனது. இதையடுத்து தனலட்சுமியை முதல் ஆளாக வீட்டை விட்டு எலிமினேட் செய்ய உள்ளதாக ஜிபி முத்து ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள புரோமோவில், அடுத்த வாரம் நடைபெற உள்ள வெளியேற்று படலத்திற்கான நேரடி நாமினேஷன் லிஸ்ட்டில் இருந்த ஜிபி முத்து, தனக்கு பதிலாக தனலட்சுமியை மாற்றிவிட விரும்புவதாக கூறினார். இதை ஏற்று அணித்தலைவரான ஜனனியும் அதற்கு சம்மதம் தெரிவித்து தனலட்சுமியை நேரடி நாமினேஷனில் மாற்றிவிட்டார்.

இதனால் அப்செட் ஆன தனலட்சுமி, உள்ள வராமலேயே இருந்திருப்பேன் என கண்கலங்கி அழுத காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. இதனால் இன்றைய எபிசோடும் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... துணிவு vs வாரிசு... பொங்கலுக்கு விஜய் - அஜித் படங்கள் மோதுவது உறுதி..! ரிலீஸ் தேதியுடன் வந்த தரமான அப்டேட் இதோ

Video Top Stories