TTF பவர் தெரியாம விளையாடுறீங்க: செய்தி சேனல்களுக்கு வாசன் எச்சரிக்கை
பிரபல யூ டியூபர் TTF வாசன் அண்மை காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது செய்தி சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது விலை உயர்ந்த பைக்குகளில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதனை வீடியோவாக பதிவு செய்து யூ டியூபில் பதிவிட்டு பிரபலமானவர் TTF வாசன். இவர் அண்மையில் தனது இருசக்கர வாகனத்தில் மிகவும் வேகமாக செல்வதை வீடியோவாக வெளியிட்டு சர்ச்சையில் சிகக்கினார், பின்னர் தான் யாரையும் பைக்கில் வேகமாக செல்ல வலியுறுத்தவில்லை, நானும் வேகமாக செல்ல மாட்டேன் என்று அறிவித்தார். ஆனால், இவரைப் போன்ற மற்றுமொரு யூ டியூப் பிரபலமான ஜிபி முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மிகவும் வேகமாக சென்று மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் TTF வாசன் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், செய்தி சேனல்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள், நீஙங்கள் TTF வாசனின் பவர் தெரியாமல் விளையாடுகிறீர்கள், பொய்யான செய்தி பரப்புவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லைஎனில் நீங்கள் வேலை செய்யும் விதத்தை வெளியிட வேண்டியிருக்கும் என்று மிரட்டல் விடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணைத்தில் வைரலாகி வருகிறது.