கூடலூர் சாலையில் வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய ஒற்றை காட்டு யானை; அச்சத்தில் ஓட்டுநர்கள்

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் வாகனம் ஒன்றை காட்டு யானை வழிமறித்த நிலையில், ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

First Published Aug 18, 2023, 11:14 PM IST | Last Updated Aug 18, 2023, 11:14 PM IST

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தெப்பக்காடு பகுதியில் சாலையோரம்  காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்ற ஜீப் வாகனத்தை திடீரென மிகுந்த ஆக்ரோசத்துடன் வேகமாக துரத்தியது. இதனால் வாகனத்தில் பயணம் செய்த நபர்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.

இந்நிலையில் காட்டு யானை துரத்துவதை அறிந்த வாகன ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை சாதுரியமாக நீண்ட தூரம் பின்னோக்கி இயக்கிதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Video Top Stories