Video : 95% பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் கட்டடம் எங்கே? - எம்.பி.மாணிக்கம் தாகூர் கேள்வி!
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைந்தால் அதற்கான பெருமை முழு பங்களிப்பை கொடுத்துள்ள ஜப்பானையே சாரும். பாஜக தலைவர் தெரிவித்த 95% பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் கட்டடம் எங்கே என்று கேள்விஎழுப்பியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என தெரிவித்து, அதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்து விட்டதாக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.
இதனிடையே, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைந்தால் அதற்கான பெருமை முழு பங்களிப்பை கொடுத்துள்ள ஜப்பானையே சாரும். பாஜக தலைவர் தெரிவித்த 95% பணிகள் நிறைவடைந்த மதுரை எய்ம்ஸ் கட்டடம் எங்கே என்று கேள்விஎழுப்பியுள்ளார்.