நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்; திருப்பதி மலை கோவிலில் வி.கே.சசிகலா சிறப்பு தரிசனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா இன்று அதிகாலை திருப்பதியில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.

First Published Feb 27, 2024, 1:45 PM IST | Last Updated Feb 27, 2024, 1:45 PM IST

சசிகலா இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு  வழிபாடு மேற்கொண்டார். சாமி தரிசனத்திற்காக நேற்று திருப்பதி மலைக்கு வந்த சசிகலா இரவு வராஹ சாமியை வழிபட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை கோவிலுக்கு சென்ற அவர் அர்ச்சனை சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை வழிபட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவற்றைப் பெற்று கொண்டார். 

Video Top Stories