Viral Video : ரயிலில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு!-ரயில்வே காவல்துறை விசாரணை!

ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர்களை மொழி கேட்டு தாக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
 

First Published Feb 17, 2023, 2:39 PM IST | Last Updated Feb 17, 2023, 2:40 PM IST

அதிகளவிலாள வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் குடியேறிவருவதாக சமீபகாலமாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது. இதனால் ஆங்காங்கே தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோவதாக சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இருதரப்பினரிடையே மோதல் போக்குகளும் சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஓடும் ரயில் ஒன்றில் வடமாநிலத்தவர்களை, ஒருவர் எந்த மொழி, என்ன ஊர் ஏனக் கேட்டு தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

Video Top Stories