வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரானவன் நான் இல்லை.! பரந்தூரில் தவெக தலைவர் விஜய்
பரந்தூரில் மக்களை சந்திக்க சென்ற தவெக தலைவர் விஜய், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. இந்த பகுதியில் புதிய விமான நிலைய திட்டம் வேண்டாம் என்று தான் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரந்தூரில் பொதுமக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர், எதிர் கட்சியாக திமுக இருக்கும் பொழுது 8 வழி சாலை திட்டம், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார்.மேலும் எதிர் கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விட்டு ஆங்கட்சியாக இருக்கும் பொழுது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.? என விஜய் கேள்வி எழுப்பினார்.