நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.. "எந்த சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவார்" - இயக்குனர் பாரதிராஜா!

Director Bharathiraja About Seeman : சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ்பாண்டியன், சின்னம் தராத நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

First Published Mar 10, 2024, 4:36 PM IST | Last Updated Mar 10, 2024, 4:36 PM IST

இந்த பிரச்சாரத்தை திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பங்கேற்று துவக்கி வைத்தார். முன்னதாக அவர் முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது..

நான் அரசியல்வாதி அல்ல. பொது மனிதனாக சொல்கிறேன். நாம் தமிழர் கட்சியினர் சீமான் வழியில் வெற்றி பெறுவார். இளைஞர்கள் மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். நான் தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகவே நாம் தமிழரை ஆதரிக்கிறேன். எந்த சின்னம் கொடுத்தாலும் சீமான் வெற்றி பெறுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

சீமானுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன். எம்ஜிஆர் காலத்தில் இருந்து போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் இதுபோல குற்றச்சாட்டுகளை தெரிவித்து தான் வருகிறார்கள் என தெரிவித்தார் அவர்.

Video Top Stories