7,000 கிலோமீட்டர் நடந்துள்ளேன்.. ஒரு இடத்தில்கூட விழுந்ததில்லை.. உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்ட வைகோ!

எலும்பு முறிவு காரணமாக இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் தனது நிலை பற்றி வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார். 
 

First Published May 29, 2024, 8:57 AM IST | Last Updated May 29, 2024, 8:57 AM IST

எலும்பு முறிவு காரணமாக இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தனது நிலை பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஏறத்தாழ 7,000 கி.மீ நடந்திருக்கிறேன். ஆனால், கீழே விழுந்ததில்லை. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் நெல்லையில் நான் தங்கி இருந்த வீட்டில் நிலைகுலைந்து சாய்ந்துவிட்டேன். 

எனக்கு தலை, முதுகெலும்பில் அடிபட்டிருந்தால் இயங்க முடியாமல் போயிருப்பேன். நான் நன்றாக இருக்கிறேன். முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அறுவை சிகிச்சைக்கு பின் நான் முன்பு போல் இயங்க முடியுமா என யாரும் சந்தேகப்பட வேண்டாம். எனக்காக கவலைப்படும் உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் கூறியுள்ளார். 

Video Top Stories