Watch : உடுமலை அமராவதி ஆற்றில் வெள்ளம்! - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அமராவதி அணை நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாகவே 88 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் உபரி நீர் மேல் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி மொத்தமுள்ள 90 அடியில் 87.11 அடி நீர் இருப்பு உள்ளது அணைக்கு வினாடிக்கு 9850 அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில் அணையில் இருந்து 10,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர்.