வேகமா போனது தப்பு தான்; கைதுக்கு பின் மனம் மாறிய வாசன்
சூலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட யூ டியூபர் TTF வாசன் நான் வேகமாக சென்றது தவறு தான், இனி இதுபோன்ற நடந்துகொள்ள மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பைக்கில் வேகமாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் பிரபலமானவர் TTF வாசன். அண்மையில் அவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதால் அவர் மீது சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட வாசன் தனது தவறை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் வேகமாக சென்றது தவறு தான் எதிர்வரும் நாட்களில் படிப்படியாக எனது வேகத்தை கட்டுப்படுத்துவன்” என்று தெரிவித்துள்ளார்.