ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலை நிறைத்த ரூ. 88.79 லட்சம் ரொக்கம், 175 கிராம் தங்கம்!!
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் இன்று கோயில் இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.
மலைகோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் ஆணையர், கோயில் மேலாளர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டு வருகின்றனர் .
பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூபாய் 88,79,682 ரொக்கமும், தங்கம் 175 கிராம் , வெள்ளி 946 கிராம் மற்றும் 162 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் காணிக்கைகளாக வரப் பெற்றுள்ளன.