விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஒடோடி உதவிய அமைச்சர் விஜய் பாஸ்கர்.. நெகிழ்ச்சி வீடியோ

 சாலை விபத்தில் சிக்கிய மேரி என்ற பெண்மணியை உடனடியாக மீட்டு முதலுதவி செய்த அமைச்சர் விஜயபாஸகர்

First Published Aug 12, 2019, 11:36 AM IST | Last Updated Aug 12, 2019, 11:38 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திருச்சி செல்லும் வழியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸகர் சென்று கொண்டு இருந்தார் அப்போது  குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் சிக்கிய மேரி என்ற பெண்மணியை உடனடியாக மீட்டு முதலுதவி செய்து கீரனூர் அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் அனுப்பி வைத்தார் அமைச்சர் விஜயபாஸகர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார் மேலும்  அமைச்சர் செய்த இந்த செயலுக்கு  சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகின்றனர்