துபாயில் உற்சாகமாக கல்வி சுற்றுலாவை கழித்த தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்கள் வீடியோ!!

துபாயில் கல்வி சுற்றுலா சென்ற தமிழ்நாடு மாணவர்களின் வீடியோவை அரசு வெளியிட்டுள்ளது.

First Published Nov 14, 2022, 1:29 PM IST | Last Updated Nov 14, 2022, 1:34 PM IST

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2021-ம் ஆண்டில் நடத்தப்பட்ட இணைய வழி வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற 68 மாணவ-மாணவிகளை கல்வித்துறை தேர்வு செய்தது. இவர்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த பத்தாம் தேதி  சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்கு அழைத்து சென்றார். இவர்களுடன் மாணவர்களின் பாதுகாப்புக்கு என்று 5 ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சி.அமுதவல்லி உள்பட 3 அதிகாரிகள் சென்று உள்ளனர். மொத்தம் 76 பேர் துபாய் சென்றனர். இவர்கள் துபாயின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இருந்த வீடியோவை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


இந்தப் பயணத்தில்,  துபாய் வாழ் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு முதல்வர் வழங்கி இருந்த 1000 புத்தகங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல்வரும், துணைத் தலைவருமான ஷேக் முகமது பின் ராசித்திடம் அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி வழங்கினார்.