விமானத்தில் முதல்வர் முக ஸ்டாலினிடம் 90களில் பேசிய வசனத்தை பேசி அசத்திய வங்கி பெண் அதிகாரி!!
விமானத்தில் முதல்வர் முக ஸ்டாலினிடம் 90களில் பேசிய வசனத்தை பேசி வங்கி பெண் அதிகாரி கவுசல்யா அசத்தினார்.
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை துவக்கி வைக்க இன்று காலை தூத்துக்குடிக்கு விமானத்தில் முதல்வர் முக ஸ்டாலின் சென்றார். அப்போது, மு.க. ஸ்டாலினிடம் 1991 ம் ஆண்டு திமுக பிரச்சாரத்தில் தான் பேசியதை தனியார் வங்கி அதிகாரி கவுசல்யா பேசிக்காட்டினார். முதல்வருடன் அமைச்சர்களும் பயணம் செய்தனர்.