புதிய பாம்பன் பாலத்தில் முதல் முறையாக சோதனை ஓட்டம்.! ரயில் போக்குவரத்து எப்போது தொடங்கும் தெரியுமா.?
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் மற்றும் பாம்பன் பகுதியை இணைக்க கூடிய ரயில்வே தூக்கு பாடம் 1914 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. ராமேஸ்வரம் தீவு மக்களுக்கு முக்கிய போக்குவரத்தாக ரயில் சேவை இருந்து வந்தது. இந்த பாம்பன் பாலத்தின் மீது ரயில் செல்லும் அழகை பார்ப்பதற்காகவை வெளிநாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ராமேஸ்வரத்திற்கு வருவார்கள். இந்தநிலையிலை நூற்றாண்டு பழமையான பாலத்தில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தின் நடுப்பகுதியில் கப்பல் மோதியது. இதனால் பல மாதங்கள் ரயில போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் இந்த பழமையான பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது. இதனையடுத்து இந்த பணிகள் கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. இடையில் கொரோனா பாதிப்பு காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டது
இதன் இடையே பழைய ரயில் பாலம் மிகவும் பழுதடைந்ததால் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மண்டபம் வரை மட்டுமே ரயில் இயக்கப்பட்டது. இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர். இந்த சூழ்நிலையில் புதிய பாம்பன் பாலப்பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதனையடுத்து புதிய பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில் என்ஜின் இயக்கப்பட்டது. இன்று சோதனை ஓட்டமாக முதல் முறையாக ரயில் என்ஜின் மற்றும் சரக்கு பெட்டிகள் இயக்கி பார்க்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு நடைபெறும் என கூறப்படுகிறது. இதனையடுத்து பாம்பன் பாலத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரயில் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.