கொட்டும் மழையில் அனாதையாக கிடக்கும் இறந்தவர் உடல்.. பரிசோதனை செய்ய மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..! பரபரப்பு வீடியோ..

கொட்டும் மழையில் அனாதையாக கிடக்கும் இறந்தவர் உடல்.. பரிசோதனை செய்ய மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..! பரபரப்பு வீடியோ..

First Published Dec 2, 2019, 5:00 PM IST | Last Updated Dec 2, 2019, 5:00 PM IST

கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து கட்டுகிறது. இயல்பான மழை 44 செ.மீ. என்கிற நிலையில் 39 செ.மீ. மழை இதுவரை பெய்திருக்கிறது. தொடர் மழையால் கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும் என்றும் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்டம்  மேட்டுப்பாளையம் அருகே நடூர் - ஏடிகாலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து, அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 17 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து 17 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேட்டுப்பாளையம் விபத்தில் இறந்தவர்கள் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மலையில் கிடைப்பதனால் மேட்டுப்பாளையம் பொதுமக்கள் மற்றும்  உறவினர்கள் மறியல் ஈடுபட்டனர் இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Video Top Stories