Asianet News TamilAsianet News Tamil

நின்ற கோலத்தில் தரிசனம் தரும் அத்திவரதர்.. காஞ்சியை நோக்கி படையெடுக்கும் பக்த கோடிகள்.! வீடியோ

இன்று அதிகாலை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இதையடுத்து அத்தி வரதரைக் காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன(படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார்.

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக சென்னை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளிப்பது நேற்றுடன் நிறைவடைந்தது. அத்திவரதரை சயன கோலத்தில் இதுவரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இதையடுத்து அத்தி வரதரைக் காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

ஏற்கனவே சயன கோலத்தில் தரிசனம் செய்த பக்தர்களும் நின்ற கோணத்தில் அத்திவரதரை காண்பதற்காக வருவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

Video Top Stories