தமிழக வெற்றிக் கழகம்.. கோவையில் நடந்த இலவச மருத்துவ முகாம் - திரளாக வந்து கலந்துகொண்ட பொதுமக்கள்!

Tamilaga Vetri Kalagam : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை தெற்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

First Published Mar 10, 2024, 7:25 PM IST | Last Updated Mar 10, 2024, 7:25 PM IST

கோவை தெற்கு மாவட்டம், மதுக்கரை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கற்பகம் மருத்துவமனை மற்றும் குலோப்வேலி டெக்னாலஜிஸ் உடன் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
த.வெ.க தெற்கு மாவட்ட தலைவர் K.விக்னேஷ்  தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை கண் மற்றும் காது, இதய பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட  தொண்டரணி தலைவர் கிரிஷ், மாணவரணி தலைவர் பாலாஜி,நிர்வாகிகள் அருண்ஈஸ்வர், உமாபதி, தமிழரசன், எட்டிமடை பாலு, சதீஷ், இளைஞரணி நிர்வாகிகள்  மாரி ராஜ்,
அருண்குமார்,செந்தில் குமார்,ரோஹித்,வினோத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

Video Top Stories