கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு.. வெளியான பகீர் வீடியோ..!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர் முயற்சி செய்துள்ளனர். 

First Published Jan 23, 2023, 11:28 AM IST | Last Updated Jan 23, 2023, 11:30 AM IST

அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர் முயற்சி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவன் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார். 

மேலும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முத்து(40), பூபாலன்(45), சின்னசாமி (85) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Video Top Stories